
தலைநகரில் நேற்று மாலை 4.30லிருந்து இரவு 7.30 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ததல், 40 பகுதிகள் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
புக்கிட் டமான்சாரா, சிகாம்புட், புக்கிட் துங்கு, புக்கிட் நானாஸ், மவுண்ட் கியாரா, செந்தூல், கம்போங் டத்தோ கிராமாட், தாமான் தாசேக் தித்திவங்சா, டூத்தா கியாரா, ஜாலான் ஈப்போ, ஜாலான் ராஜா லாவுட் ஆகிய பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
மாநகர் மன்றம், பொது பாதுகாப்புத் துறை ஆகிவற்றின் பணியாளர்கள் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டனர்.



