
15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் தொங்கு நாடாளுமன்றம் அமையும் சாத்தியம் இருக்கும் என்ற அச்சத்தினால் பொதுத்தேர்தலைத் தள்ளிப் போடத் தேவையில்லை என்று அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது, தொங்கு நாடளுமன்றமே அமையும் என்பதால் தேர்தலைத் தள்ளி வைப்பதே நல்லது என்று இஸ்மாயில் சப்ரி கூறியதற்கு அவர், அதற்காக அச்சம் தேவையில்லை என்று தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
நாம் நினைப்பது போல நிலைமை படு மோசமாக இல்லை. அது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லாது. பொருளாதாரத்தைப் பாதிக்காது என்றும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.



