
பிரதமர் துறை அமைச்சர் அப்துல் லத்திப் அமாட் தாம் எல்சிஎஸ் போர்க் கப்பல் கட்டுமானத் திட்டத்தில் ஊழல் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அத்திட்டத்தில் பெரும் பங்கு வகித்த Zainab Mohd Saleh (ஸைனாப் முகமட் சாலே) தமது இரண்டாவது மனைவி என்றும் ரபிஸி கூறுவது சுத்தப் பொய் என்றும் அவர் தெரிவித்தார்.
லத்திப் இக்குத்தகைக்கு முன்னர் தற்காப்பு அமைச்சின் பல்வேறு குத்தகைத் திட்டங்களிலும் சம்பந்தப்பட்டு, கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளதாக ரபிஸி ரம்லி குற்றம் சாட்டினார்.
அவருக்கும் அவரது இரண்டாவது மனைவியுமான ஸைனாப் முகமட் சாலேக்குச் சொந்தமான நிறுவனங்கள் அரசுப் பணத்தைக் கொள்ளையடித்த விவகாரத்தை இன்று வெளியிடப் போவதாக ரபிஸி சூளுரைத்துள்ளார்.



