
அரசியல் நன்கொடைகளை அரசியல்வாதிகள் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலோ அல்லது அறங்காவலர்களின் கணக்கிலோ வரவு வைக்க முடியும். எனினும், டாட்டாசோனிக் குழுமத்திடமிருந்து பெற்ற 6 மில்லியன் ரிங்கிட்டை வழக்கறிஞரிடம் கொடுத்து தமது அறக்கட்டளையின் கணக்கில் சேர்க்கும்படி தாம் கேட்டுக் கொண்டதாக ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
குத்தகை ஒன்றை மேற்படி நிறுவனத்திற்குத் தர வேண்டியே 6 மில்லியன் ரிங்கிட்டை தாம் பெற்றதாகக் கூறப்படுவதை அவர் முற்றிலும் மறுத்தார்.
ஏழை எளியோருக்குச் சேவை செய்யவே நன்கொடைகளைத் தமது சொந்தக் கணக்கில் செலுத்தாமல் அறக்கட்டளையின் கணக்கில் சேர்த்ததாக அவர் தெரிவித்தார்.



