
15ஆவது பொதுத்தேர்தலை உடனே நடத்தும்படி 158 அம்னோ தொகுதிகள் பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு நெருக்குதல் கொடுப்பதாக சுங்கை பெசார் தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் தெரிவித்தார்.
பொதுத்தேர்தல் சம்பந்தமாக 158 தொகுதிகளின் தலைவர்கள நேற்று அம்னோ தலைமையத்தில் கூடி, 4 மணி நேரம் அது பற்றி விவாதித்ததாகவும் பொதுத்தேர்தலை விரைவில் நடத்த இஸ்மாயில் சப்ரிக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
நேற்றைய கூட்டத்திற்கு ஸாஹிட் தலைமையேற்ற வேளையில், அதில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பும் உதவித் தலைவர் மாட்ஸிர் காலிட்டும் கலந்து கொள்ளவில்லை.
பொதுத்தேர்தலில் போட்டியிட்டும் வேட்பாளர்கள் பற்றி விவாதிக்கவே அந்த அவசரக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.



