
எஸ்ஆர்சி நிதி முறைகேட்டில் நஜிப் ரசாக்கின் தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், 15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அம்னோவுக்கு மிகவும் முக்கிய பேச்சாளராகவும் பிரச்சார பீரங்கியாகவும் இருந்த நஜிப் இல்லாமையால் அம்னோவும் தேசிய முன்னணியும் ஆட்டம் கண்டு செய்வதறியாது திகைத்துள்ளன.
அவருக்கு ஈடாக எதிர்க்கட்சிகளை வறுத்தெடுத்தது யாருமில்லை. இளைஞர்களிடையே அவரின் செல்வாக்கு அபரிமிதமானது. முகநுலில் அவருக்கு 46 லட்சம் ஆதரவாளர்கள் உள்ளனர்.
இந்தச் சந்தர்ப்பத்தை பக்காத்தான் முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், அடுத்த ஆட்சி அதனுடையதுதன் என்று அவாங் அஸ்மான் பாவி, ஜெனிரி அமீரும் குறிப்பிட்டுள்ளனர்.



