
நடமாட்ட கட்டுப்பாட்டை ஆணையை மீறும் வகையில்,மாவட்டதைக் கடந்துச் சென்று நகைகள் வாங்கச் சென்ற இருவருக்கு,போலீசார் அபராதம் விதித்தனர்.பாராட் டாயா மாவட்டத்திலிருந்து வந்து,புக்கிட் ஜம்புலிலுள்ள பேரங்காடி ஒன்றில் உள்ள நகைக்கடையில் நகைகள் வாங்கிக் கொண்டிருந்த 23 மற்றும் 58 வயது பெண்கள் போலீசாரின் சோதனையில் சிக்கிக் கொண்டனர்.
இவ்விருவரும் வழங்கியக் காரணங்கள் ஏற்றுக் கொள்ள முடியாததால் இருவருக்கும் தலா 5 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக தீமோர் லாவுட் மாவட்டப் போலீஸ் தலைவர் சோபியான் சந்தோங் கூறினார்.இந்த நகைக்கடை அமைந்துள்ளது எந்த மாவட்டம் என்பது எங்களுக்கு தெரியாது என அவர்கள் காரணம் கூறியதாகவும் அவர் சொன்னார்.



