33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

12 லட்சத்திற்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் மலேசியாவிலிருந்து வெளியேறவில்லையா

🔥 Views : 5
👁 Reading Now : 64

12 லட்சத்திற்கும் மேற்பட்ட சீனப் பிரஜைகள் மலேசியாவிலிருந்து வெளியேறவில்லை என்று கூறப்படும் தகவலை உள்துறை அமைச்சு மறுத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை நாட்டிலிருந்து 12 லட்சம் சீனப் பிரஜைகள் வெளியேறவில்லை என்று தெரிவிக்கப்படும் புள்ளி விவரம் உண்மையில்லை என்றும் இது குறித்த சரியான தகவல் வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார். மலேசிய குடிநுழைவுத்துறையின் புள்ளி விவரப்படி 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை 71,77,043 (71 லட்சத்து, 77,043 ) சீனப் பிரஜைகள் மலேசியா வந்துள்ளனர். இந்த காலக்கட்டத்தில் 59 லட்சத்து 54,765 சீனப் பிரஜைகள் நாட்டிலிருந்து வெளியேறியிருப்பதாகவும் ஹம்சா கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles