
1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புடையே சூரிய வெளிச்சத்தின் மூலம் மின்சாரம் பெறும் திட்டம் சம்பந்தப்பட்ட ரோஸ்மா மன்சூரின் லஞ்சக் குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு முன்கூட்டியே கசிந்துள்ளதாக வெளியான தகவல் குறித்து புகார் செய்யும்படி பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டனர். இதன் தொடர்பில் இதுவரை எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்றும் புகார்கள் கிடைத்தவுடன் விசாரணை தொடங்கப்படும் என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் அஸ்மி அபு காசிம் ( Azmi Abu Kassim) தெரிவித்தார். ரோஸ்மா குற்றவாளியென வெளியான தீர்ப்பின் நகல் குறித்த ஆவணம் ஒன்றை மலேசிய டுடே இணையதள பதிவேட்டாளர் ராஜா பெட்ரா கமாருடின் ( Raja Petra Kamaruddin) பதிவிட்டுள்ளார்.



