
15ஆவது பொதுத்தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்று கோரும் அம்னோவினர் வலுவிழந்து நிற்கதியாக இருப்பதாக பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ Mohideen Yasin (முஹிடின் யாசின்) தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidi (அமாட் ஸாஹிட் ஹமிடி) தமது ஊடகச் செய்தியில், அடுத்தாண்டுக்குப் பொதுத்தேர்தலை ஒத்தி வைத்தால், தேசிய முன்னணியின் வெற்றி பாதிக்கப்படும் என்றும் ஆட்சியைக் கைப்பற்றுவது குதிரைக் கொம்பாக மாறும் என்றும் குறிப்பிட்டது அம்னோவும் அதன் உறுப்புக் கட்சிகளும் ஆட்டம் கண்டு நிற்பது தெரிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற அவை அக்டோபர் 3ஆம் தேதி கூடி, 7ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அடுத்த நாள் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று தாம் கணிப்பதாகத் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் மாநாட்டில் உரையாற்றும்போது அவர், நாட்டில் நீதித் துறை அரசியல் தலையீடு இன்றி சிறப்பாகச் செயல்படுவதால் நஜிப்பின் வழக்கில் நியாயமான தீர்பை அளித்துள்ளது. அதனை யாரும் நிந்திக்க வேண்டாமென்றும் அவர் எச்சரித்தார்.



