30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

வெளி நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை: கூட்டரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க அனுமதி

🔥 Views : 23
👁 Reading Now : 60

மலேசிய தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு தானியங்க முறையில் குடியுரிமை கிடையாது என்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதி கோரப்படுகிறது.
இந்த விவகாரத்தில் முழு மூச்சாக இயங்கிவரும் (பேமிலி பிரண்டியர்ஸ்) ‘Family Frontiers தலைவர் சுரியானி கெம்பே, கூட்டரசு நீதிமன்றத்திற்கு இதனை எடுத்துச் செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சட்டத் துறை அமைச்சர் இந்த விவகாரத்திற்கு முறையான பதில் அளிக்காமல் இருப்பதால், அரசின் மீது வழக்கைத் தொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாகவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானியங்க முறையில் குடியுரிமை பெறத் தகுதி இருப்பதாக 2021இல் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும், மேல் முறையீட்டு நீதிமன்றம், தகப்பானாரின் வழியில்தான் குழந்தை குடியுரிமை பெற வேண்டுமென்று கூறி, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ரத்து செய்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles