
அரசியலில் தாம் ஒரு நன்மகனாகச் (ஜெண்டல்மேன்) செயல்பட்டதில் வருத்தமில்லை என்று நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் பதவியை இழந்தாலும் மக்களின் சேவைக்கே முன்னுரிமை தந்ததாக, சிறைக்குச் செல்வதற்கு முன்னர் தமது டுவிட்டரில் அவர் செய்தி வெளியிட்டிருந்தார்.
அரசியல்வாதி நன்மகனாக இருக்கக் கூடாதென்ற பாடத்தைப் படித்துக் கொண்டதாகவும் ஆனால், மக்களுக்காக நல்லதையே செய்யும் மனோபாவத்தை தாம் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது பிரதமர் காலத்தின்போது நாட்டின் பொருளாதாரத்தை ரிம. 70,000 கோடியிலிருந்து 1.4 டிரில்லியனாக (1 டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ) உயர்த்தியதாகவும் Petronas (பெட்ரோனாஸ்), யாத்ரீகர் வாரியம், ஊழியர் சேமநிதி போன்றவற்றின் சொத்துகளை பன்மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லதையே நினைத்து, நல்லதையே செய்த தமக்கு சிறை ஒரு பரிசு என்றே எடுத்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



