
தமது பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி உறவினர் ஒருவரின் நிறுவனத்திற்கு 1.7 மில்லியன் பெறுமான குத்தகைத் திட்டத்தை வாங்கிக் கொடுத்த சிலாங்கூர் மாநில ஸ்மார்ட் டெலிவரி மேம்பாட்டு நிறுவன இயக்குநர் மஸ்லான் மஹாடி(51) என்பவர் மீது ஊழல் வழக்கு சுமத்தப்பட்டது.
அந்த நிறுவனத்தில் அவருக்கும் பங்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டு சிறையும் அதில் சம்பந்தப்பட்ட தொகைக்கு 5 மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.
80,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர் மாதமொரு முறை அருகிலிருக்கும் எம்ஏசிசி அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திடவும் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் நீதிபதி ரொஸீலா சாலே உத்தரவிட்டார்.



