
கூட்டரசு நீதிமன்றம் நஜிப்பின் தண்டனையை உறுதிபடுத்தியதில் தமது தலையீடு இருந்ததாகச் சொல்வது பெரும் அபத்தம் என துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமது பிரதமர் பதவிக் காலத்தில் தமக்கு வேண்டிய நீதிபதிளைத் தாம் நியமிக்கவில்லை என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
தலைமை நீதிபதி Tun Tengku Maimun Tuan Mat (துன் தெங்கு மைமுன் துவான் மாட்) டை தமது காலத்தில் அவரின் திறமை, தகுதி, அனுபவம், கல்வியறிவு போன்ற காரணங்களினால் அப்பதவியில் அமர்த்தியதாகவும் நஜிப்பின் வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பில், தமது செல்வாக்கு இருந்ததாகக் கூறுவது நீதித் துறையை அவமதிக்கும் செயலென்று குறிப்பிட்டார்.
நஜிப் குற்றவாளி என்று தெங்கு மைமுன் மட்டுமே கூறவில்லை, மாறாக உயர்நீதிமன்ற நீதிபதி நஸ்லான், மேல்முறையீட்டு நீதிபதிகள் மூவர், கூட்டரசு நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் ஆகியோர் தீர்ப்பளித்துள்ளதையும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென மகாதீர் குறிப்பிட்டார்.



