
உலக வாணிப மையத்தில் நடைபெற்ற அம்னோவின் சிறப்பு மாநாட்டில், நஜிப் ரசாக்கின் அறிக்கையை அவரது புதல்வி Nooriyaana Najwa (நூரியானா நஜ்வா) வாசித்தார்.
அதில், தமக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் புதிய ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்காததால் தமக்கு நியாயமான நீதி கிடைக்கவில்லை. தமது வழக்கறிஞர்கள் ஆவணங்களைப் படித்துப் பார்க்க வழக்கை 4 மாதம் தள்ளி வைக்கக் கோரியதும், இங்கிலாந்து வழக்கறிஞரை அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியில், தமக்காக ஆஜராகாத நிலையில் தமக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமரும் அம்னோவின் தலைவருமான தமக்கே இம்மாதிரியான நயவஞ்சகம் நடந்திருப்பதால், இது போன்று யாருக்கும் நடக்க வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.



