
15ஆவது பொதுத்தேர்தலை தாமதப்படுத்துவது பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கு பெரும் அவப்பெயரைக் கொண்டுவரும் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அது கட்சித் தலைவர் ஸாஹிட்டின் நிலையை பலவீனப்படுத்தி நஜிப் ரசாகின் செல்வாக்கை அதிகரிக்கும் என்று மலாயாப் பல்கலைக்கழகத்தின் அவாங் அஸ்மான் பாவி தெரிவித்தார்.
இளம் வாக்காளர்களின் ஆதரவை தேசிய முன்னணி இழக்க வேண்டிவரும் என்றும் நஜிப் சமூக ஊடங்களில் கோலோச்சும் போது, அது கட்சிக்கு சறுக்கலைக் கொண்டுவரும்.
போர்க்கப்பல் விவகாரம் தேசிய முன்னணிக்கான ஆதரவைக் குறைக்கும் என்று இஸ்மாயில் சப்ரி கூறினாலும், அது ஒரு சாக்குப் போக்கு என்று அவாங் சாடினார்.



