
நாளை முதல் பொது முடக்கம் காலகட்டத்தில், பிரிந்திருக்கும் தம்பதிகள் சந்திப்பதற்கான மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்கும் அனுமதி இல்லை என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்
இறப்பு மற்றும் மோசமாக நோய்வாய்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தல் போன்ற அவசர நோக்கங்களுக்காக மட்டுமே காவல்துறை மாநில, மாவட்ட எல்லைகளைக் கடக்கும் அனுமதி கடிதங்களை வழங்கும்.
சுகாதாரச் சேவைகள், மருத்துவம் மற்றும் தினசரி தேவைகளைப் பெறுவதற்கான நடமாட்டங்களுக்கு 10 கி.மீ. சுற்றளவில் அல்லது குடியிருப்புக்கு அருகில் உள்ளவைகளுக்கு மட்டுமே அனுமதி என்று இஸ்மாயில் கூறினார்.
அதாவது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க இருவர் மட்டுமே காரில் செல்ல அனுமதி.
உணவு கடைகள் உட்பட மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்க அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. அதேசமயம் தொழிற்சாலைகள் மூடப்படும் என்று அவர் தெரிவித்தார்
