
ஆவணம் இல்லாத கள்ளக் குடியேறிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று பிஎஸ்எம் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இவர்களை தடுத்து வைக்கும் திட்டத்தைக் குடிநுழைவு துறை இலாகா கைவிட வேண்டும் என்று மலேசியச் சோசலிசக் கட்சியின் (பிஎஸ்எம்) மத்தியச் செயற்குழு உறுப்பினர் ஷரன் ராஜ் கேட்டுக் கொண்டார்.
தடுத்து வைப்பதைவிட, அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது சரியான நடவடிக்கையாகும். ஏனெனில் தடுப்புக்காவல் மையங்களில் நெரிசலை அது கூட்டும் .
சுஹாகாமின் கூற்றுப்படி, மலேசியச் சிறைச்சாலைகள் ஏற்கெனவே மிகவும் நெரிசலில் இருக்கின்றன. இது கோவிட் -19 நோய்த்தொற்று பரவும் அபாயத்திற்கும் வித்திடும் என்று அவர் எச்சரித்தார்.
