
பொதுமக்கள் தடுப்பூசி தேர்வு செய்ய முடியாது என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
மைசெஜாத்தெரா விண்ணப்பத்தின் மூலம் பொதுமக்கள் தடுப்பூசியைத் தேர்வு செய்ய அனுமதிப்பது குறித்து, அரசாங்கம் பரிசீலிக்கும் என்று இதற்கு முன்னர் இவர் கூறினார்.
“நாங்கள் இதை முதலில் கருத்தில் கொண்டோம், ஆனால் இப்போது எங்கள் கவனம் தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் உள்ளது. எனவே, எங்களிடம் உள்ள தடுப்பூசிகளை கொடுப்போம் என்று அவர் தெரிவித்தார்
