
2021 ஆண்டுக்கான பட்ஜெட்டில் நாட்டில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு உதவ 3 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஐந்து மாதங்களில் மூன்று கோடி வெள்ளி எந்தெந்த தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற பட்டியலை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் கேட்டுக்கொண்டார்.
தேசிய முன்னணி மற்றும் பக்கத்தான் ஆட்சிக்காலத்தில் தமிழ் பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது.

ஆனால் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் தலைமையில் பெரிதாகத்தான் நேஷனல் அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கு 3 கோடி வெள்ளி மட்டுமே பட்ஜெட்டில் ஒதுக்கியது
2 கோடி வெள்ளி குறைக்கப்பட்டது. இதுபற்றி பலமுறை நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இவ்வாண்டில் ஒதுக்கப்பட்ட 3 கோடி வெள்ளி மானியம் எந்தெந்த தமிழ்ப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.