
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் கோர்ட்டு மலை பிள்ளையார், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், பத்துமலை முருகன் திருத்தலத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா தெரிவித்துள்ளார். காலையிலும் மாலையிலும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும். பிரதான வாசல் மூடப்படும் வேளையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் அனுமதி இல்லை என்று அவர் சொன்னார்.