
கடந்த 5 ஆண்டு காலமாக பேரா கமுண்டிங்கில் செயல்பட்டு வந்த ரெப்பிட் பேருந்தின் போக்குவரத்து சேவை ஜூன் 15 – ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது.
போதுமான நிதி வளமும்,நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காலத்தில் மக்களின் ஆதரவும் இல்லாதால்,பிரசாரானா மலேசிய செண்டிரியான் பெர்ஹாட்டின் கிளை நிறுவனமான ரெப்பிட் பேருந்து சேவகி நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பேரா மாநில அரசாங்கத்தின் என்சி ஐஏ வாரியம்,தைப்பிங் நகராண்மைக் கழகம் மற்றும் பிரசாரானா ஆகியவை ஒன்றிணைந்து மூன்று வழி பயணங்களை மேற்கொண்டு வந்தன.என்சிஐஏ உடனான நிதி மற்றும் தேவையான ஆதரவும் 2019 -ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்து விட்டது.பேருந்து சேவையை தொடர்ந்து வழி நடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை சமாளிக்க முடியாத நிலையில்,இறுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரா கமுண்டிங் மற்றும் தைப்பிங் வட்டார வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.