
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஏற்பாட்டில் செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் இன்று கோவிட் 19 இலவச மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களை பரிசோதித்துக் கொண்டனர் .
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

பேறு குறைந்தவர்கள் இந்த சோதனையில் கலந்து கொள்ள சிறப்பு பஸ் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை களுடன் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டது பாராட்டுக்குரியது என டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் தெரிவித்தார்