
கோலாலம்பூர், மே 1
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மதிப்பளிக்கும் நாள் மே 1ஆம் தேதியாகும்.
இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் கள் எளிமையான முறையில் தொழிலாளர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள்.
கோவிட் 19 தாக்கத்தினால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பை எதிர் நோக்கி உள்ளனர்.
இருப்பினும் உலக தொழிலாளர் தினத்திற்கு போராடிய தலைவர்களை மக்கள் மறக்கவில்லை.
மலேசியாவில் தொழிலாளர்களுக்கு போராடிய ஒரு வரலாற்று நாயகன் என்றால் அது மக்கள் தொண்டன் டாக்டர் வி டேவிட் ஆவார்.
தமது 18 வயதில் தொழிலாளர்களுக்காக போராடி சிறை சென்றவர் டாக்டர் வி டேவிட் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்டியூசி எனப்படும் மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பின் செயலாளராக இருந்த இவர், மலேசிய போக்குவரத்து தொழிற் சங்கத்தை தோற்று வித்து தொழிலாளர்களுக்கு போராடினார்.
ஒட்டுமொத்த தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட ஒரு உன்னத தலைவர் இவர்.
மலேசிய தொழிலாளர் கள் வரலாற்றில் இவருக்கு என்று மிகப்பெரிய வரலாறு இருக்கிறது.
தொழிலாளர்களுக்கு என்று பல போராட்டங்கள் நடத்தி சிறை தண்டனை பெற்றார்.
ஏழை தோட்டப் பாட்டாளி பிள்ளைகள் நலன் கருதி போர்ட் கிள்ளானில் தொழில் நுட்பக் கல்லூரி நிறுவி சாதனை படைத்தார்.

மலேசிய அரசியல் வரலாற்றில் ஐந்து முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
1959 பங்சார், 1969 டத்தோ கிராமாட், 1978 டமான்சாரா, 1986, 1990 பூச்சோங் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றார்.
மேலும் பந்தாய் சட்டமன்ற தேர்தலில் நான்கு முறை வெற்றி பெற்றார்.
பலமுறை சிறைக்கு சென்றவர். இதில் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருக்கிறார்
தொழிலாளர் வர்க்கத்தின் உயர்வுக்கு போராடிய மக்கள் தொண்டன் டாக்டர் வி டேவிட் கடந்த 2005 ஆம் ஆண்டில் காலமானார்.
கடந்த 40 ஆண்டு களுக்கு மேலாக தொழிலாளர்களுக்கு உழைத்த ஒரு உன்னத தலைவர் டாக்டர் வி டேவிட் என்று அவரின் நெருங்கிய தோழர் டேவிட் பாலா தெரிவித்தார்.
எதாவது ஒரு சாலைக்கு டாக்டர் வி டேவிட் பெயர் சூட்ட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று டேவிட் பாலா தெரிவித்தார்.
டாக்டர் வி டேவிட்டின் போராட்டங்கள் மூலம் இன்று அரசியலில் வெற்றி கொடி நாட்டிக கொண்டிருப்பவர் களில் பினாங்கு மாநில அரசின் துணை முதல்வர் டாக்டர் பி ராமசாமியும் ஒருவர் ஆவார்.
1984 ஆம் ஆண்டில் உலகத் தமிழர் மாமன்றத்தை அமைத்து தமிழுக்கு போராடிய இவரை உலகம் ஒருபோதும் மறக்காது.
