25.3 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

பரிதாபமாக உயிரிழந்த கணபதிக்கு நீதி வேண்டும்!
YB டாக்டர் குணராஜ் கோரிக்கை

உயிரிழந்த கணபதி

போலீசார் அடித்து கொடுமைப்படுத்தியதால் காலை இழந்து இறுதியில் பரிதாபமாக உயிரிழந்திருக்கும் கணபதி மரணத்திற்கு நீதி வேண்டும் என்று அவரின் தாயார் தனலட்சுமி கோரிக்கை விடுத்ததுள்ளார.
எந்த தவறும் செய்யாத தனது அன்பு மகனை இழந்து அவர் பரிதவிக்கிறார்.
ஆகவே கணபதி மரணத்திற்கு நிதி வேண்டும் என்று மலேசியர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள் என்று சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் ஜோர்ஜ் குணராஜ் தெரிவித்தார்.
இது ஒரு கொடூரமான மரணம் என்று அனைத்து கட்சி தலைவர்களும் சாடி வருகிறார்கள்.
ஆகவே கணபதிக்கு நிதி கிடைக்க வேண்டும்.
அரசாங்கம் சிறப்பு குழுவை அமைத்து காரணமானவர் அனைவரும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
இதற்கு முன்னர் எத்தனையே இளைஞர்கள் தடுப்பு காவலில் மரணம் அடைந்திருக்கிறார்கள்.
தடுப்பு காவல் மரணத்திற்கு ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.
கணபதி குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உட்பட பல தலைவர்களும் குரல் கொடுத்து வருவதால் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணும் வேளையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வேண்டும் என்று டாக்டர் குணராஜ் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles