32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

விமானங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை

🔥 Views : 6
👁 Reading Now : 52

விமானப் பயணிகள் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்த முடிவானது ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அனுசரிக்கப்படும் விதிமுறைக்கு ஒப்ப எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், பயணிகள் சுய விருப்பத்தின் பேரில் முகக் கவசம் அணிவதற்குத் தடையேதும் இல்லை. விமானப் பயணத்தின்போது, சிறுவர்கள், முதியோர்களுடன் செல்லும்போது முகக் கவசம் அணிந்தால் அது பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles