26.9 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

சூலு சுல்தானின் வாரிசுகளிடமிருந்து தனது சொத்துகளை
பெட்ரோனாஸ் பாதுகாக்கும்

🔥 Views : 15
👁 Reading Now : 69

நெதர்லாந்தில் பெட்ரோனாஸ் சொத்துகளைக் கையகப்படுத்தும் சூலு சுல்தான் வாரிசுகளின் முயற்சிகளை அந்நிறுவனம் எல்லா வகையிலும் எதிர்த்துப் போராடும் என்று தெரிவித்துள்ளது.
அந்நாட்டில் இருக்கும் பெட்ரோனாசுக்குச் சொந்தமான பல சொத்துகளைப் பறிமுதல் செய்ய, சூலு சுல்தானின் வாரிசுகள் டச்சு நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
பெட்ரோனாஸின் அறிக்கை ஒன்றில், சூலு சுல்தானின் வாரிசுகள் சபா மாநிலம் தங்களுக்குச் சொந்தம் என்றும் அதற்கு ஈடாக வெளிநாட்டில் இருக்கும் சொத்துகளை வலுக்கட்டாயமாகப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles