
தங்களின் குடியிருப்புக்கிடையே எம்ஆர்டி3இன் கட்டுமானம் தொடங்குவதை எதிர்த்து, அம்பாங், Taman Kenjaana (தாமான் கெஞ்சானா) குடியிருப்புவாசிகள் மகஜர் ஒன்றை சிலாங்கூர் சுல்தானுக்கு அனுப்பியுள்ளனர்.
குடியிருப்புவாசிகளின் தலைவர் Mohd Najib Mat Nor (முகமட் நஜிப் மாட் நோர்), மகஜர் ஒன்று கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafudin Idris Shah (சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷாவு)க்கு அனுப்பி வைத்துள்ளதோடு, பாண்டான் இண்டா போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதேவேளையில், தேசிய முன்னணி தலைவர்களைச் சந்தித்து தங்களுக்கான ஆதரவைக் கோரியதாகவும், மந்திரி பெசார் Amirudin Shari (அமிருடின் ஷாரி)யைச் சந்திக்க தாங்கள் முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
