30.8 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

அரசியல் கட்சிக்கு அங்கீகாரத்தைப் பெற மூத்த குடிமக்கள்
நீதிமன்றத்தை நாடியுள்ளனர்

தங்களின் அரசியல் கட்சியான Parti Kemakmuran Negara
(PKN) (பார்ட்டி கெமாக்முரான் நெகாராவை) உள்துறை அமைச்சு நிராகரித்ததை எதிர்த்து மூத்த குடிமக்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளனர்.
முன்னாள் இராணுவத்தினரை பெரும்பான்மையாகக் கொண்டு அதன் தலைவராக இருக்கும் பிரிகேடியர் ஜெனரல் (ஓய்வு) Abdullah Mohamed (அப்துல்லா முகமட்) கூறும்போது, நீதிமன்றத்திற்குச் செல்வதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார்.
கட்சியைப் பதிவு செய்யும் விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு நிராகரித்தது தங்களை மரியாதைக் குறைவாக நடத்தியதற்குச் சமம் என அதன் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
2021 மார்ச் 19ஆம் தேதி அக்கட்சி அரசாங்கப் பதிவிற்காக விண்ணப்பித்தது. கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அக்கட்சியின் மனுவை ஏற்றுக் கொண்டு, சங்கங்களின் பதிவகமான ஆர்ஓஎஸ் 14 நாள்களுக்குள் அதற்கான பதிலை அளிக்கும்படி உத்தரவிட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles