29.3 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

பொதுத்தேர்தலை ஒத்தி வைக்கக் கோருவது அமைச்சரவைப் பதவியைக் தற்காக்க அல்ல!

🔥 Views : 11
👁 Reading Now : 57

இவ்வாண்டு பொதுத்தேர்தலை நடத்த பெரிக்காத்தான் நேஷனல் 12 அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பருவகால மழை, வெள்ளமே காரணமே தவிர அமைச்சரவைப் பதவியைத் தற்காக்க அல்லவென வெளியுறவு அமைச்சர் Saifuddin Abdullah (சைஃபுடின் அப்துல்லா) தெரிவித்தார்.
பகாங் பெரிக்காத்தான் தலைவரான சைஃபுடின், தங்களின் எதிர்ப்புக்கு வெள்ளமும் அதனையொட்டிய மக்களின் துயர் துடைப்புமே காரணம் எனக் குறிப்பிட்டார்.
ஆண்டு இறுதியில் கடும் மழையின் காரணமாக வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அம்னோ தலைவர் ஸாஹிட் ஹமிடி, 12 பெரிக்காத்தான் அமைச்சர்கள் தங்களின் பதவியைத் தற்காத்துக் கொள்ளவே அம்னோவை ஏதிர்த்து, பேரரசாருக்குக் கடிதம் எழுதியதைச் சாடியதற்கு, சைஃபுடின் தமது விளக்கத்தைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட பருவமழைக் காலத்தில் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles