
பாஸ் கட்சி அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்பினால் அது அம்னோவின் 3 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதை உச்சமன்ற உறுப்பினர் புவான் ஸர்க்காசி உறுதிப்படுத்தினார்.
பாஸ் கட்சியின் ஏமாற்றும் நடவடிக்கைக்கு அம்னோ இனிமேலும் ஏமாறாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின் அமைச்சர்களூம் பெரிக்காத்தானோடு இணைந்து பேரரசருக்குக் கடிதம் எழுதியிருப்பது பாஸ் கட்சியின் துரோகத்தை வெளிப்படுத்தி இருப்பதாகக் புவாட் தெரிவித்தார். இதன் மூலம் பாஸ் கட்சி அம்னோவுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை என்று தெரிவதாகக் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சி உண்மையிலேயே முஸ்லிம்களின் ஒற்றுமையை விரும்பியிருந்தால், அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அமானாவுக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
