
ஜிஎஸ்டி எனும் பொருள், சேவை வரியானது (ஜிஎஸ்டி) அரசின் வருமானத்தை அதிகரிக்கும். எனினும், இவ்வாண்டில் அதனை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லையென நிதியமைச்சர் தெங்கு ஸப்ருல் அஸிஸ் தெரிவித்தார்.
அது சம்பந்தமாக ஆய்வுகள் நடத்தி மேலும் அதனை எவ்வாறு சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தலாம் என்பதை மேற்கொள்ளாம் என அவர் தெரிவித்தார்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர் அதனை மீண்டும் கொண்டுவரும் சாத்தியம் இருப்பதாகத் தாம் கூற இயலாது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் பொருளாதார சூழ்நிலையை அனுசரித்தே, அதனை மீண்டும் கொண்டு வரலாமா என்பது தீர்மானிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
2018ஆம் ஆண்டு பக்காத்தான் ஆட்சி காலத்தில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பு அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக எஸ்எஸ்டி எனும் விற்பனை சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. அத்திட்டத்தை நஜிப் ரசாக் காலத்தில் 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
