
சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவை இம்மாதம் 11 – ஆம் தேதி சிலாங்கூர் மந்திரிபுசார் அமிருடின் ஷாரி சந்தித்தபோது மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கான அனுமதிக்கு அவர் கோரிக்கை விடுக்கவில்லை. சிலாங்கூர் சுல்தானின் தனிப்பட்ட உதவியாளர் Munir Bani இன்று இதனை தெரிவித்தார். மாநில சட்டமன்றம் கலைப்பதில்லை என்ற முடிவு குறித்து தவறான தகவல் வெளியாகி வருவதாக Munir Bani வெளியிட்ட அறிகையில் இத்தகவலை வெளியிட்டார். சிலாங்கூர் சுல்தானை சந்தித்தபோது மாநில சட்டமன்றத்தை கலைப்பதற்கதான கோரிக்கையை மந்திரிபுசார் அமிருடின் ஷாரி முன்வைக்கவில்லை. மாறாக நடப்பு நிர்வாகம் தொடரும் நோக்கத்தை கொண்டிருப்பதாக மட்டுமே அவர் தெரிவித்தார்.
