26.4 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

நஜிப்பிற்கான பொது மன்னிப்பு அரசின் கைகளில் இல்லை

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கான அரச மன்னிப்பை வழங்குவது அரசாங்கத்தின் கைகளில் இல்லையென்றும் அது முழுக்க முழுக்க பொது மன்னிப்பு வாரியம், பேரரசரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என பராமரிப்புப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
நஜிப் ஊழல் வழக்கிலும் தீர்ப்பிலும் தலையிடாத கொள்கையை அரசு தொடர்ந்து நிலைநிறுத்தி வருவதோடு, அவருக்குப் பொது மன்னிப்பை முன்னெடுக்கவும் அம்னோ முனையாது என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், நஜிப்பிற்கு முழு மன்னிப்பு வழங்க அம்னோ நடவடிக்கை எடுக்கும் என்று ஊடகங்களில் பரவலாக செய்தி பரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles