31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சார்ல்ஸுக்கு பதிலாக கணபதி ராவ்:
கோபிந்த் சிங் திட்டவட்டம்

🔥 Views : 6
👁 Reading Now : 28

பொதுத்தேர்தலில் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோவுக்குப் பதிலாக சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் வி. கணபதி ராவ் போட்டியிட கட்சி அங்கீகரித்துள்ளதாக சிலாங்கூர் ஜசெக தலைவர் கோபிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
கட்சியில் மாற்றத்தைக் கொண்டுவரவும் கிள்ளான் தொகுதியில் வேறொருவரை மாற்ற வேண்டுமென்ற தொகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் இந்த மாற்றம் செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
சில பிரச்சினைகள் பற்றி சந்தியாகோவிடம் இதற்கு முன்னர் பேசப்பட்டதாகவும், கிள்ளானில் வேறொருவரைப் பரிந்துரைப்பது பற்றியும் அவரிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
சிலாங்கூர் ஆட்சிக் குழுவில் இருந்த அனுபவத்தின் அடிப்படையில் கணபதிராவ் அத்தோகுதி எம்பியாக இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்று கட்சி நம்பிக்கை கொண்டிருப்பதால், அவரைக் கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக நியமிக்கப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles