31.8 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

ஹெலிகாப்டர் சுகாதாரச் சேவை தற்காலிக நிறுத்தம்

🔥 Views : 6
👁 Reading Now : 22

கேமரன் மலை, பிரிஞ்சாங்கில் மருத்துவப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை அடுத்து, நாட்டின் உட்புறங்களில் உள்ள பூர்வகுடியினருக்கு மருத்துவச் சேவை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் Khairi Jamaludin (கைரி ஜமாலுடின்) தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் விபத்தின் காரணத்தை அறிந்து அதற்கேற்ற வகையில் அதில் பயணிக்கும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அந்தச் சேவையில் ஈடுபடும் மருத்துவர்கள், பணியாளர்களுக்குப் பாதுகாப்பின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அச்சேவை மீண்டும் தொடங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
ஹெலிகாப்டரில் சென்று சுகாதாரச் சேவை அளிப்பது கிளந்தான், குவா மூசாங், உலு பேராக் போன்ற இடங்களில் பூர்வகுடிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles