27.6 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

சுயசரிதை புத்தகத்தைப் பிரச்சினையாக்கிய அரசு, பணிக்குழுவின் மீது டோமி வழக்கு

🔥 Views : 9
👁 Reading Now : 55

தமது சுயசரிதைப் புத்தகத்தில் கருத்துகள் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளும் அரசுக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டிய அரசு, புத்தகத்தை ஆய்வு செய்த பணிக்குழுவின் மீதும் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
தமது புத்தகத்தை ஆய்வு செய்து அதில் குற்றம் கண்டுபிடித்த சிறப்புப் பணிக்குழுவின் அறிக்கை சட்டவிரோதானது, அது குற்றவியல் சட்டம் பிரிவு 499, 500ஐயும் தகவல் பல்லூடகச் சட்டம் பிரிவு 233க்கு எதிரானது என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் தமது மனுவில், சிறப்புப் பணிக்குழுவின் தலைவரும் சரவாக் முன்னாள் சட்டத்துறைத் தலைவருமான ஃபோங் ஜூ சுங் மற்றும் 8 மற்ற உறுப்பினர்களையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவ்வறிக்கையைப் பிரசுரம் செய்து வெளியிட்டது முன்னாள் சட்டத்துறைத் தலைவரின் உரிமையில் தலையிடுவதாகவும் அது தமது பெயருக்குக் களங்கத்தை உருவாக்கவும், ஆதாரமற்ற, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் அடங்கியதாகவும் அது ஆத்திரத்தை, முறைகேட்டை, அச்சுறுத்தலை, துன்புறுத்தலை விடுத்திருப்பதாக அறிவிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles