
தம்புன் தொகுதியில் தாம் போட்டியிட முடிவு செய்தது பெர்சத்துவின் அமாட் ஃபைசால் அஸுமுவை தனிப்பட்ட முறையில் எதிர்க்க வேண்டுமென்பல்ல என்றும் பக்காத்தானை பேராக்கில் வலுப்படுத்தவே என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தமக்கும் அமாட் ஃபைஸாலுக்கும் தனிப்பட்ட விரோதம் எதுவுமில்லை என்பதால் அவரை தாம் எதிரியாகக் கருதவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அமாட் ஃபைஸாலின் தகப்பனார் Datuk Azumu Tak மாமனர் Mohammed Radzi Manan ஆகியோர் தாம் அம்னோவில் இருந்தபோது பல உதவிகளைச் செய்திருப்பதால் தமது பரப்புரைகளில் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசப் போவதில்லை என்று அன்வார் உறுதி கூறினார்.
போர்ட்டிக்ஷனில் இருந்து தம்புன் தொகுதிக்கு மாறி வந்தது, அங்கு தோற்று விடுவோம் என்ற காரணத்திற்காக அல்லவென்றும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் 5 தவணைகளில் வெற்றி பெற்றிருப்பதால் அந்தச் சேவையானது தமக்குக் கை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
