32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

எம்ஏசிசி விசாரணை என்ற பேரில் என்னை மிரட்டுகிறது

🔥 Views : 7
👁 Reading Now : 54

ஊழல் தடுப்பு ஆணையம் தம்மை மிரட்டும் தோரணையில் திடீர் சோதனை நடவடிக்கையை நடத்தி, தனது அதிகாரிகளை 7 மணி நேரத்திற்கு மேல் விசாரணைக்கு உட்படுத்தியதாக பிகேஆர் துணைத் தலைவர் ரபிஸி ரம்லி குற்றம் சாட்டினார்.
சொத்து அறிவிப்பில் அவரின் இன்வோக் சொலூஷன் நிறுவனச் சொத்து அறிவிக்கப்பட்டது. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று Pertubuhan Jalinan Perpaduan Malaysia (பெர்துபோஹான் ஜாலினான் பெர்பாடுவான் மலேசியா) வின் தலைவர் Said Mohd Imran said Abdul Aziz (சைட் முகமட் இம்ரான் சைட் அப்துல் அஸிஸ்) புகார் அளித்ததன் பேரில், அந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமது சொத்து அறிக்கையின் மீது இந்த நடவடிக்கையை எடுத்திருக்கும் எம்ஏசிசி, எல்சி எஸ் எனும் போர்க் கப்பல் கட்டுமான ஊழல் விவகாரத்தில் மெர்சிங் எம்பி Abdul Latif Ahmad (அப்துல் லத்திஃப் அமாட் டின்) மீது ஆதாரப்பூர்வமாகக் குற்றம் சுமத்தியதை எம்ஏசிசி கண்டு கொள்ளாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகளை மிரட்ட அரசியல் ஆயுதமாக எம்ஏசிசி பயன்படுத்தப்படுகிறதா என்றும் ரபிஸி கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles