32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

புத்ராஜெயாவில் நிருவாக இடைவெளி

🔥 Views : 7
👁 Reading Now : 53

15-ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் அடுத்த ஆட்சியை அமைக்க போதுமான ஆதரவு இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்தார்.

நவம்பர் 20 விடியற்காலையிலேயே அன்வார் அறிவித்த நிலையில், ஒரு நாள் கழித்து நவம்பர் 21-ஆம் நாள் பிற்பகல் 2:00 மணி அளவில் புதிய ஆட்சியை அமைப்பதற்குத் தேவையா ஆதரவுப் பத்திரங்கள் மற்றும் பிரதமர் பெயரையும் சமர்ப்பிக்கும்படி அரண்மனை சார்பில் இஸ்தானா நெகாரா அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டாளர் டத்தோஸ்ரீ அகமட் ஃபாடில் சம்சுட்டின் அரசியல் கட்சிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உடனே அட்சி அமைக்க அன்வார் முன்வந்த போதிலும் ஒரு நாள் இடைவெளி ஏற்பட்டிருப்பது, அடிப்படைவாத கொள்கை கொண்ட பெரிக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் குதிரை பேரம் நடத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து பரிமாறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles