32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

துவாங்கு அம்புவான் மாமன்னர் வாழ்க 10-ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் – -டாக்டர் குணராஜ்

🔥 Views : 7
👁 Reading Now : 44


நாட்டின் புதிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு பிகேஆர் கோத்தா ராஜா தொகுதி சார்பிலும் செந்தோசா சட்டமன்றத் தொகுதி மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவிப்பதாக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் தெரிவித்துள்ளார்.

15-ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசியாவின் 10-ஆவது பிரதமராக ஐந்து நாட்களுக்குப் பின் அன்வார் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மக்கள் நீதிக் கட்சி-பிகேஆர் சார்பில் பாராட்டும் வரவேற்பும் தெரிவிப்பதாக தொகுதி பொறுப்பாளருமான குணராஜ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்கள் வளமாக வாழவும் அரசியல் நிலைத்தன்மை உருவாகவும் மற்றும் கல்வி-பொருளாதார மேம்பாட்டிற்கும் நிலையான ஆட்சி தேவை. அத்தகைய ஆட்சிக்கு வழிபிறக்கும் வகையில் புதிய பிரதமரை பொருத்தமான நேரத்தில் நாட்டிற்கு அடையாளம் காட்டிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தஃபா பில்லா ஷாவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியுமான குணாரஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles