32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

பெட்டாலிங் ஜெயா மாவட்டம் முழுவதும் 10 சாலை தடுப்பு சோதனைகள்

🔥 Views : 11
👁 Reading Now : 25

நாட்டில் பொது முடக்கம் ஜூன் 1 முதல் 14ம் தேதி வரை அமலுக்கு வந்திருக்கும் வேளையில் பெட்டாலிங் ஜெயா மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சாலை தடுப்பு சோதனைகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் பக்ருதீன் தெரிவித்தார்.
இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் படி அவர் கேட்டுக்கொண்டார். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும். குறிப்பாக வீட்டுக்கு தேவையான பொருட்கள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டில் ஒருவர் வெளியே சென்றால் நல்லது.
பெட்டாலிங் ஜெயா வால் 10 இடங்களில் போடப்பட்டிருக்கும் சாலை தடுப்பு சோதனைகளில் 35க்கும் மேற்பட்ட போலீஸார் காவலில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles