
மலேசியா வான்வெளியில் சீனா நாட்டைச் சேர்ந்த 16 ராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோத்தா கினபாலு வான்வெளியில் சீனா வின் 16 ராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனா ராணுவ விமானங்கள் அத்துமீறி நுழைந்திருப்பது கடுமையான விவகாரம் என்று மலேசியா ஆகாயப்படை இராணுவத் தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அப்துல் சாமட் தெரிவித்தார்.
நாட்டின் வான்வெளி பாதுகாப்புக்கு இது மிரட்டலை ஏற்படுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
