
நாட்டில் நான்காவது தொழில்மய புரட்சியை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு அது சம்பந்தமான பயிற்சி வகுப்பகளை அரசு மேற்கொள்வது அவசியமாகும் என மலேசிய முதலாளிமார் கூட்டமைப்பின் The Malaysian Employers Federation (MEF) தலைவர் சைட் ஹுசேய்ன் சைட் ஹுஸ்மான் தெரிவித்தார்.
தொழில்நுட்ப மற்றும் தொழில் திறன் பயிற்சிகளை(TVET- டிவெட்) வழங்கும் சிறு மற்றும் நடத்தர நிறுவனங்களுக்கு வரி விதிப்புச் சலுகைகளை வழங்க அரசு முன்வர வேண்டுமென்றும் தற்போது அதற்கான கட்டுப்பாடுகளை (ரெட் டேப்புகள்) முதலில் அகற்ற வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதில் சிறிய, பெரிய தொழில்துறைகள் விரைவாகவும் சுறு சுறுப்பாகவும் செயல்பட அரசு பல்வேறு அனுகூலங்களைச் செய்து கொடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது குலசேகரன் மனிதவள அமைச்சராக இருந்தபோது, இந்த டிவெட் பயிற்சிகளை வழங்க பல முயற்சிகளை மேற்கொண்ட பின்னர், பெரிக்காத்தான் ஆட்சியில் அவரின் நடவடிகைகள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதாகவும் சைட் ஹுஸ்மான் கவலை தெரிவித்தார்.



