
பதவியில் இருக்கும் நீதிபதியையும் அண்மையில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதியையும் சட்டத் துறைத் தலைவராக நியமிக்க வேண்டாமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இத்தகைய முறையானது நீதிபதிகளின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் என்றும் நீதிபதிகளுக்கு சன்மானம் வழங்கப்படுவதாகக் கருத இடமிருப்பதாக மரண தண்டனையை எதிர்க்கும் Malaysians Against Death Penalty and Torture (Madpet) மாட்பெட் அமைப்பின் தலைவர் Charles Hector (சார்ல்ஸ் ஹெக்டர்) கேட்டுக் கொண்டார்.
தற்போதையை சட்டத்துறைத் தலைவருக்குப் பதிலாக கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Zabidin Diah (ஸபிடின் டியா), அப்பீல் நீதிமன்ற நீதிபதி Yaacob Sam (யாக்கோப் சாம்) மற்றும் நீதிபதி Abdul Karim Abdul Jalil (அப்துல் கரிம் அப்துல் ஜாலில்) ஆகியோரின் பெயர்கள் அப்பதவிக்கு அடிபடுகின்றன.
அவர்களுக்குப் பதிலாக மூத்த அரசு அதிகாரி, சட்டத் துறை அலுவலக மூத்த வழக்கறிஞர் அல்லது வேறெந்த வழக்கறிஞரையும் நியமிக்கலாம் என சார்ல்ஸ் பரிந்துரைத்தார்.



