30.3 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

உதவித் தொகை போதது!பக்காத்தான் கூட்டறிக்கை

🔥 Views : 16
👁 Reading Now : 57

அரசாங்கம் அறிவித்திருக்கும் கோவிட் 19 குறுகிய கால உதவிநிதி திட்டங்கள் பெரிய அர்த்தத்தை கொண்டு வரவில்லை. மாறாக, இந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு உதவி செய்வதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.

  1. 2500 வெள்ளி வருமானம் கீழ் உள்ளவர்களுக்கு 500 வெள்ளி உதவிநிதி. அதனுடன், 2500 வெள்ளிலிருந்து 5000 வெள்ளி வருமானம் உள்ளவர்களுக்கு 300 வெள்ளி உதவிநிதியாகும்.

இது மிகவும் சிறிய நிதியாகும். இந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு பற்றாது.
மேலும், பி.கே.பி.3.0 வரும் ஜூன் 14-ஆம் தேதிக்கு பின்னர் தொடரப்படும் சாத்தியமும் உண்டு.

  1. பி40 மக்களுக்கு வங்கியின் 3 மாதம் மோரோடேரியம் (வங்கியை தொடர்புக் கொள்ள வேண்டும்). எம் 40 மக்களுக்கு இதில் பயனும் இல்லை. அதிலும் அவர்களின் வாழ்வாதாரம் உண்மையிலேயே பாதிக்கபட்டுள்ளது.
  2. மின்சார வாரியத்தின் கட்டணத்தில் கொடுக்கப்படும் 10 சதவீதம் கழிவு கொஞ்சம் பேருக்கு தான் கிடைக்கும். அதிலும் 10 சதவீதம் போதாது.

அனைவரையும் வீட்டில் இருக்க சொன்னால், மின்சார கட்டணமும் உயர தான் செய்யும். ஏற்கெனவே கடந்த 2020 –ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் மக்களின் மின்சார கட்டணம் அதிகமாக இருந்தது.

  1. தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதி ஒரு மாதம் மட்டுமே வழங்கப்படுகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் 1200 வெள்ளியா?
  2. 2021-ஆம் ஆண்டு டிசம்பர் வரை சொந்த வீடு வாங்கும் திட்டம் ஆதரிக்கப்படுகிறது. அதனால், கட்டுமான துறை, தனியார் வீடைப்பு துறை வளர்ச்சியடையும். நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் இருந்த போது கொண்டு வந்த இத்திட்டம் சிறந்தது, அதனை அரசாங்கம் தொடர்கிறது.

அந்த 40 பில்லியனில், 5 பில்லியனே மக்கள் அனுபவிக்க நேரடியாக வழங்கப்படும் நிதியாகும். அப்படி பார்த்தால் 35 பில்லியன் என்பது நேரடியான உதவியல்ல.
ஆதலால், உண்மையிலேயே உதவி செய்ய வேண்டும் அரசாங்கம் நினைக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மக்களுக்கு உதவுவது சரியல்ல. தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு இந்த உதவிகள் மக்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஹாசான் அப்துல் காரிம் (கெடிலான), டத்தோ ஹாஜி ஹாசானுடின் முகமட் யூனுஸ் (அமானா), சோங் சேங் ஹேன் (ஜ.செ.க), நத்ரா இஸ்லாம் (கெடிலான்)
சிவகுமார் வரதராஜூ, (ஜ.செ.க) சான் போங் ஹின் (ஜ.செ.க),
சா கீ ஹீன் (ஜ.செ.க) ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles