
ஒரு காலத்தில் நாட்டில் 1,500 தமிழ்ப்பள்ளிகள் இருந்து, அது மெல்ல மெல்ல தேய்ந்து இப்போது 500 பள்ளிகளாகக் குறைந்துள்ளன.
இந்நிலையில், தோட்டப்புறப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கவலையை ஏற்படுத்துகிறது.
குறைந்த எண்ணிக்கையில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை ஒருங்கிணைத்து நடத்த கல்வியமைச்சு மறைமுகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நடவடிக்கை தொடர்ந்தால், தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் பாதிக்கும்., ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைந்து, தலைமையாசிரியர்கள் வேறு மொழி பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு, துணைத் தலைமையாசிரியர்களாக பதவியேற்க நேரிடும்.
பள்ளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தால், இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் படிப்படிப்பாக மூடும் ஆபாயம் நேரிடும். தமிழிப்பள்ளிகள் இல்லாது போனால், மொழியும் இனமும் அழியும் நிலை ஏற்படும்.
ஆக, இந்த விவகாரத்தைத் தடுக்க சமூக, அரசியல் தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று சமூகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது!



