28.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

தனிப்பட்ட முறையில் அன்வாரை தாக்குவதை நிறுத்துக!

🔥 Views : 9
👁 Reading Now : 27

பிரதமர் பதவியை ஏற்று இன்னும் 100 நாள்கள் கூட ஆகாத நிலையில், அரசுக்கு எதிரானவர்கள் அன்வரை வசைபாடி, அவரின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இன்மையைத் தெரிவித்து வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென பிகேஆரின் முன்னாள் எம்பி Yusmadi Yusof (யுஸ்மாடி யூசோப்) கேட்டுக் கொண்டார்.
நாடு எதிர்நோக்கியிருக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் களைய கால அவகாசம் வேண்டும். ஆட்சியை அமைத்த மறு நாளே மாற்றத்தைக் கொண்டுவர யாராலும் முடியாது என்பதை எதிர்க்கட்சியினர் உணர வேண்டும்.
அன்வரின் மீது நம்பிக்கை இல்லையென்று துன் மகாதீர் கூறியிருக்கும் வேளையில் அன்வார் செல்லுபடியாகாத தலைவர் என்றும் அவர் வாக்குறுகளை நிறைவேற்ற முடியாத பிரதமர் என்றும் பெர்சத்துவின் சைஃபுடின் அப்துல்லா கூறுகிறார். அன்வாரின் திறமையின் மீது கடுமையான விமர்சனங்களை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
அந்தத் தாக்குதல் யாவும் தனிப்பட்ட தாக்குதல் என்றும் அது பொறாமையின் வெளிப்பாடு என்பதால், அதனை அவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று யுஸ்மாடி கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles