
அண்மையில் மெனாரா கே எல் கோபுரத்தை தனியார் நிறுவனம் ஒன்றிற்கு விற்றதில் ஊழல் முறைகேடு இருப்பதாக நம்பப்படுவதால் அது சம்பந்தமாக விசாரணை நடத்த மூவரை ஊழல் தடுப்பு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
அந்தக் கோபுர நிர்வாகத்தை நடத்தி வந்துள்ள Kuala Lumpur SB (கோலாலம்பூர் எஸ்பி) எனும் நிறுவனத்தின் 100 விழுக்காடு பங்குகளை திவாலாகும் நிலையில் இருந்த Hydro Shoppe (ஹைட்ரோ ஷோப்) நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
டெலிகோம் தொலைபேசி நிறுவனத்தி- டமிருந்து அந்தக் கோபுரம் தனியார் நிறுவனத்திற்குக் கை மாறியதில் ஊழல் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள- தால் அதனை விசாரணை செய்ய வேண்டுமென அறைகூவல் விடுக்கப்பட்டது.



