
சிலாங்கூர் மாநில துணைப் போலீஸ் தலைவராக இருந்த டத்தோ சசிகலா தேவி மாநில இடைக்கால போலீஸ் தலைவராக வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டாய பதவி ஓய்வு பெற்ற போலீஸ் தலைவர் டத்தோ Arjunaidi Mohd (அர்ஜுனைடி முகமட்)டிற்குப் பதிலாக சசிகலா தேவி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
35 ஆண்டுகள் போலீஸ் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி, பரந்த அனுபவம் பெற்றிருக்கும் சசிகலா தேவி பொருளாதாரத் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றவராவார்.
டான்ஸ்ரீ அழகேந்திராவிற்குப் பிறகு, 38 ஆண்டுகள் கழித்து, சிலாங்கூரில் ஓர் இந்தியர் அப்பதவியில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.



